NATIONAL

கனமழை தொடர்ந்தால் சிலாங்கூரில் வெள்ள அபாயம்

ஷா ஆலம், ஜன 22: கனமழை தொடர்ந்தால் சிலாங்கூரில் மூன்று மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளுக்கு ஏற்ப ஆயத்த அறிவிப்பை நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்) இன்று வெளியிட்டது.

கிள்ளான், பெட்டாலிங் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய மாவட்டங்கள் பேரழிவை சந்திக்கும் என்று கணிக்கப் படுவதாக முகநூல் மூலம் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனமழை தொடர்ந்தால் ஜொகூர், மலாக்கா, பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து குடியிருப்பாளர்களும், குறிப்பாக ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்கள் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க இந்த ஆயத்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

பிற மாநிலங்களின் நிலைமை அறிய மற்றும் கூடுதல் தகவல்களைப் பெற பொதுமக்கள் https://publicinfobanjir.water.gov.my, Facebook @PublicInfoBanjir மற்றும் Twitter @JPS_InfoBanjir என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.


Pengarang :