SELANGOR

மூன்று உள்ளாட்சிப் பகுதிகளில் (PBT) மொத்தம் 5,028 டன் மொத்தக் கழிவுகள் சேகரிப்பு

ஷா ஆலம், ஜன 22: KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) மூன்று உள்ளாட்சிப் பகுதிகளில் (PBT) இரண்டு வாரங்களில் மொத்தம் 5,028 டன் (தட்டுமுட்டு) மொத்தக் கழிவுகளைச் சேகரித்துள்ளது.

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கிள்ளான், சுபாங் ஜெயா மற்றும் ஷா ஆலம் ஆகிய மாவட்டங்களில் 875 இடங்களில் மொத்தக் குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ ராம்லி முகமட் தாஹிர் தெரிவித்தார்.

ஒவ்வொரு உள்ளாட்சி பகுதியிலும் KDEB கழிவு மேலாண்மை, வழக்கம் போல் மொத்த சேகரிப்பை நடத்துகிறது, ஆனால் ரோல் ஆன் ரோல் ஆஃப் (RORO) தொட்டிகள் ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் வழங்கப்படும். பெருவாரியான மக்கள் பண்டிக்கை கொண்டாடும் பகுதியில்தான் மொத்தக் குப்பை சேகரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது.

“இந்த மூன்று பகுதிகளில் ஜனவரி தொடக்கத்தில் இருந்து 5,028 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன,” என்று சிலாங்கூர்கினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

சில பகுதிகளில், அந்தந்த உள்ளூர் அதிகாரிகள் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மொத்த கழிவுகளை நிர்வகிக்கிறார்கள் என்று ரம்லி விளக்கினார்.

“மொத்தக் குப்பைகளைச் சேகரிக்கும் சேவை தேவைப்படும் பகுதிகளை அடையாளம் காண ஆலோசிக்கப்பட்டது, நாங்கள் எப்போதும் சிறந்த சேவையை வழங்க முடியும் என்பதை உறுதிப் படுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :