NATIONAL

இரு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் அறுவர் மரணம்- கஹாங்கில் சம்பவம்

ஜொகூர்  பாரு, ஜன 23-  குளுவாங், பத்து 13, கஹாங், ஜாலான் குளுவாங்-மெர்சிங்கில் நிகழ்ந்த இரண்டு கார்கள் சம்பந்தப்பட்ட  விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த வேளையில் மேலும் ஐவர் காயமடைந்தனர்.

பெரோடுவா மைவி மற்றும் ஹோண்டா ஸ்ட்ரீம் கார்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்து  குறித்து மாலை 4.40 மணியளவில்  தங்களுக்கு அழைப்பு வந்ததாக குளுவாங் 
தீயணைப்பு மற்றும் மீட்புத்  துறையின்  தலைவர் முகமது  பௌசி முகமது நோர் கூறினார்.

 பெரோடுவா மைவி காரில் பயணித்த  மஸ்ரினா கஹ்தர் (வயது 21), முகமது ஜர்பா நோரமின், (வயது16), முகமது சியாகிர் நோரமின் வயது 11 முகமது அசிரஃப் ரதிக் 
அப்துல்லா (வயது 11), மற்றும் முகமது அடில் அப்துல் காதிர் (வயது  23) ஆகியோரை இவ்விபத்தில் பலியானவர்களாவர் என்று அவர் சொன்னார்.

இதற்கிடையில், இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய குளுவாங் மாவட்ட  காவல் துறைத்  தலைவர், உதவி ஆணையர் பஹ்ரின் முகமது நோர், பெரோடுவா மைவியில் பயணித்த மற்றொரு பயணி நேற்றிரவு என்சே பெசார்  ஹஜ்ஜா கல்சோம் 
மருத்துவமனையில் உயிரிழந்ததாகக் கூறினார்.

வாகனத்தின் முன் இருக்கையில்  பயணித்த  சித்தி நூர்சன்னா கஹ்தர் (வயது 26), 
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது இரவு 9.30 மணியளவில் உயிரிழந்தார் என்று அவர் தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.

மெர்சிங்,  ஆயர் பாப்பான் கடற்கரையில் குளிப்பதற்காக குளுவாங்கிலிருந்து 
கஹாங்கிற்கு பெரோடுவா மைவி காரில் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த போது   இந்த விபத்து நிகழ்ந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக 
பஹ்ரின் கூறினார்.

இந்த விபத்தில் மஸ்ரினாவின் மூத்த சகோதரியான சித்தி நூர்சன்னாவின் தலை, வயிறு மற்றும் இடுப்பு எலும்புகளில் காயங்கள் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

Pengarang :