SELANGOR

சுங்கை துவா தொகுதியில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் மலிவு விற்பனை

கோம்பாக், ஜன 25- சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி நிலையிலான
ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையில் மலிவு விலை
அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள்
இலக்காக கொள்ளப்படும்.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு குறைந்த வருமானம் பெறும் பி40
தரப்பினரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் கடந்தாண்டைப்
போலவே இவ்வாண்டும் மேற்கண்ட இடங்களில் இந்த விற்பனையை
நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக சுங்கை துவா தொகுதி சேவை
மையத்தின் நிர்வாகி மைமுன் மிஸ்மான் கூறினார்.

இத்தகைய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் மலிவு விற்பனையை
நடத்தும் பட்சத்தில் பொருள்கள் விரைவாக தீர்ந்து விடுவதோடு
இல்லத்தரசிகள் மற்றும் மூத்த குடிமக்களிடமிருந்து இந்த திட்டத்திற்கு
மிகுந்த ஆதரவும் கிடைத்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு முறையும் மலிவு விற்பனையை நடத்தும் போது 500
குடும்பங்கள் வரை பயனடைகின்றன. இந்த திட்டத்தின் மூலம் வரும்
மார்ச் மாதம் வரை சுங்கை துவா தொகுதியில் 10,000 குடும்பங்கள் வரை
பயன்பெறும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

செலாயாங் போலீஸ் நிலையத்தின் எதிரே இன்று நடைபெற்ற மாநில
அரசின் மலிவு விற்பனையின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார். இவ்வாண்டில் இரண்டாவது முறையாக இதே இடத்தில்
இந்த மலிவு விற்பனை நடத்தப்படுகிறது.

இந்த விற்பனையில் 300 தட்டு முட்டைகள் மட்டுமே விற்பனைக்கு
வைக்கப்பட்டதால் இதில் கலந்து கொண்டவர்களில் பலர் தங்களுக்கு
முட்டை கிடைக்காதது குறித்து ஏமாற்றம் தெரிவித்தனர். பொது மக்கள்
மத்தியில் முட்டைக்கான தேவை அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு
அந்த உணவு மூலப் பொருளின் விநியோகத்தை அதிகரிக்கும்படி

பி.கே.பி.எஸ்.எனப்படும் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக்
கழகத்தை நாங்கள் கேட்டுக கொண்டுள்ளோம் என்றார் அவர்.


Pengarang :