SELANGOR

மேரு சட்டமன்றத்தில் நடைபெற்ற மலிவு விற்பனையில் ஒன்றரை மணி நேரத்தில் 500 கோழிகளும் 500 தட்டு முட்டைகளும் விற்றுத் தீர்ந்தன

கிள்ளான், ஜன. 25: இன்று மேரு சட்டமன்றத்தில் நடைபெற்ற மலிவு விற்பனையில் ஒன்றரை மணி நேரத்தில் 500 கோழிகளும் 500 தட்டு முட்டைகளும் விற்றுத் தீர்ந்தன.

மேரு மேற்பார்வையாளர் நூர் நசிரா அஹ்மட் கூறுகையில், சுராவ் ஜாமியா, பெர்சியரன் ஹம்சாவில் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் இந்த விற்பனை திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

“காலை 9 மணி முதல் மக்கள் பொருட்களை வாங்க வரிசையில் நிற்க தொடங்கிவிட்டனர். அதனால் நாங்கள் விற்பனையைக் சற்று முன்னதாகவே திறந்தோம்.

“இன்று நாங்கள் 500 கோழிகள் மற்றும் 500 தட்டு முட்டைகளைக் கொண்டு வந்தோம், இந்த இரண்டு பொருள்களும் ஒன்றரை மணி நேரத்தில் விற்று தீர்ந்து விட்டன. அதே நேரத்தில் அரிசி, மீன் மற்றும் இறைச்சி போன்ற பிற பொருள்களையும் அதிகமானோர் வாங்கினர்,” என்று அவர் கூறினார்.

தனது தரப்பு பணம் செலுத்தும் கவுன்டரையும், பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் இடத்தையும் தனித்தனியாகப் பிரித்து வைத்ததால் விற்பனை சீராக நடந்தது என நூர் நஜிரா தெரிவித்தார்.

சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டு கழகத்தால் (PKPS) நடத்தப்படும் இந்த மலிவு விற்பனைத் திட்டம் ஜனவரி 15 முதல் மார்ச் வரை ஒவ்வொரு நாளும் 11 இடங்களில் நடைபெறுகிறது.


Pengarang :