SELANGOR

ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதி நிர்மாணிப்பு- பொது மக்களின் கருத்துகள் வரவேற்பு

ஷா ஆலம், ஜன 26- ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதியின் நிர்மாணிப்பு தொடர்பான கருத்தைப் பெறும் நிகழ்வின் வாயிலாக அத்திட்டம் பற்றிய தெளிவான பார்வையைப் பெறுவதற்குரிய வாய்ப்பினைப் பொது மக்கள் பெற முடியும்.

இந்த உத்தேசத் திட்டம் 3டி எனப்படும் முப்பரிமாண காணொளி, தகவல் திரை மற்றும் கருத்து மாதிரி மூலம் காட்சிப்படுத்தப்படும் என்று எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கட்டமைப்பு கூறியது.

இத்திட்டத்தைப் பொது மக்கள் மதிப்பீடு செய்து இதன் தொடர்பான தங்கள் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கு ஏதுவாக கியு.ஆர். குறியீடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்கள் வழங்கும் பொருத்தமான கருத்துகள் இந்த விளையாட்டுத் தொகுதியின் மேம்பாட்டுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படும். பொதுமக்களின் தேவைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற சிலாங்கூர் அரசு மற்றும் எம்.பி.ஐ.யின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டம் 188 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும். இதில் 60 விழுக்காட்டுப் பகுயில் அனைத்துலகத் தரத்தினலான விளையாட்டரங்கம் அமைக்கப்படும்.

சமூகத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இளைஞர்களுக்கு வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ஏதுவாக எஞ்சிய 40 விழுக்காட்டுப் பகுதியில் பொழுதுபோக்கு பூங்காவும் வர்த்தக மையங்களும் நிர்மாணிக்கப்படும்.

விளையாட்டுத் தொகுதி நிர்மாணிப்பு தொடர்பில் பொது மக்களின் கருத்தைப் பெறும் இந்த நிகழ்வு இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 10ஆம் தேதி வரை காலை 10.00 மணி முதல்  இரவு 10.00 மணி வரை எஸ்.ஏ.சி.சி.பேரங்காடியில் நடைபெறும்.


Pengarang :