SELANGOR

இந்த ஆண்டு 10 வீட்டுத் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன- பிகேஎன்எஸ்

ஷா ஆலம், ஜன 26: சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) இந்த ஆண்டு 10 வீடமைப்பு திட்டங்களைத் திட்டமிடுகிறது.

லைட் ரெயில் டிரான்சிட் (எல்ஆர்டி) நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட பொது வசதிகளில் அருகில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

“இந்த ஆண்டு மொத்த வளர்ச்சி மதிப்பு (GDV) RM1 பில்லியன் சந்தைத் திறனுக்கு உட்பட்டு, மொத்தம் 10 திட்டங்களை நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

“நாங்கள் இந்த திட்டத்தில் ஷா ஆலம், பாங்கி மற்றும் சைபர் ஜெயா நகரங்களை இலக்காகக் கொண்டுள்ளோம். தங்களுடைய முதல் வீட்டை வாங்க விரும்பும் நபர்களுக்கு இந்த குடியிருப்பு பொருத்தமானது” என்று டத்தோ மஹ்மூத் அப்பாஸ் கூறினார்.

அவரது கூற்றுப்படி, சம்பந்தப்பட்ட 10 திட்டங்களில் அட்வெனா ரெசிடென்சி, செக்‌ஷன்16 ஷா ஆலம் ஆகியவை அடங்கும்.

இவை தற்போது கட்டுமானத்தில் உள்ள திட்டங்களாகும் மற்றும் மொத்த 232 யூனிட்களில் 70 சதவீதத்திற்கும் மேல் பதிவு செய்யப்பட்டு விட்டன.

“மேலும், பிகேஎன்எஸ் குறைந்த விலை வீட்டுத் திட்டமான இண்டானா ரியா அபார்ட்மென்ட் 3ஐ பண்டார் பாரு பாங்கியில் ஜனவரி 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தொடங்கும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :