NATIONAL

RON97, RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை

கோலாலம்பூர், ஜன 26: ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை RON97, RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை.

நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97 லிட்டருக்கு RM3.35 ஆகவும், RON95 (RM2.05) மற்றும் டீசல் (RM2.15) ஆகவும் உள்ளது.

“உலகளாவிய சந்தையில் எண்ணெயின் உண்மையான விலை உயர்வு கண்டிருந்தாலும் அரசாங்கத்தால் RON95 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு RM2.05 ஆகவும், டீசலின் விலை RM2.15 ஆகவும் பராமரிக்கப்படுகிறது.

அந்த இரண்டு பொருட்களின் உண்மையான சந்தை விலை உச்சவரம்பு விலையை தாண்டி இருந்தாலும், அது நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே நிலைத்துள்ளது

“உலகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் பராமரிக்கப் படுவதை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்கும்” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :