SELANGOR

செமினி தமிழ்ப்பள்ளியில் பொங்கல் விழா

செமினி, ஜன 28: இங்குள்ள செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மிக விமரிசையாகப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இப்பள்ளியில் மொத்தம் 435 மாணவர்கள் பயில்கின்றனர், மேலும் 28 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு பள்ளி வளாகத்தில் காலை 8.00 மணி தொடங்கி 10.00 மணி வரை நடைபெற்றது.

மாணவர்கள் அனைவரும் வகுப்பு வாரியாக ஆசிரியர்களின் துணையோடு புது பானைகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். பொங்கல் விழா இப்பள்ளியில் வருடாந்திர நிகழ்வாக நடத்தப்படுகிறது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுபோன்ற கலாச்சார நிகழ்ச்சிகளைப் பள்ளிகளில் ஏற்பாடு செய்தால் மாணவர்களிடையே நம் பாரம்பரிய கலாச்சாரப் பண்புகளும் ஒற்றுமை உணர்வும் மேலோங்கும் என்ற நோக்கத்தில் இவ்விழாவை ஏற்பாடு செய்ததாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு மதியழகன் கூறினார்.

இதன்வழி மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த பண்பு மிக்க மனிதர்களாக நம் சமுதாயத்தில் வலம் வர முடியும் என்பதில் ஐயமில்லை என்று மேலும் தெரிவித்தார்.


Pengarang :