SELANGOR

சுங்கை காண்டீஸ் தொகுதியின் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் 1,000 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், ஜன 30- சுங்கை காண்டீஸ் தொகுதி நிலையிலான சீனப்புத்தாண்டு பொது உபசரிப்பு கிள்ளான், தாசேக் பண்டார் புத்ரியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்லினங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதை நோக்கமாக கொண்ட இந்த பொது உபசரிப்பு நிகழ்வுக்கு நகராண்மைக் கழக உறுப்பினர்கள் மற்றும் 11 குடியிருப்பாளர் சங்கங்கள் ஏற்பாட்டு ஆதரவை வழங்கியிருந்ததாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவின் அக்மது முக்னி கூறினார்.

இந்த ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் நாம் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும். பிற இனங்களை மதிப்பதற்கும் அவர்களின் விழாக்களை போற்றுவதற்கும் ஏதுவாக நாட்டில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் நாம் கலந்து கொள்வது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சுங்கை காண்டீஸ் தொகுதியில் அனைத்து இனங்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் தொடர்ந்து நிலைத்திருக்க பிரார்த்திக்கிறேன் என்றார் அவர்.

இந்த பொது உபரிப்பில் சிறார்களுக்கு அங்காவ் பண அன்பளிப்பு வழங்குவது, உணவு மற்றும் பான விற்பனை, அதிர்ச்ஷடக் குலுக்கல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.


Pengarang :