SELANGOR

வெ.8.2 கோடி வர்த்தகக் கடனைத் திரும்ப வசூலிக்க ஹிஜ்ரா இலக்கு

ஷா ஆலம், ஜன 30- ஏழு கடனுதவித் திட்டங்கள் வாயிலாக மொத்தம் 8 கோடியே 80 லட்சம் வெள்ளி கடன் தொகையை இவ்வாண்டில் திரும்ப வசூலிக்க யாயாசான் ஹஜ்ரா அறவாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஹிஜ்ரா அறவாரியத்தின் கடனுதவித் திட்டங்களான ஐ-பிஸ்னஸ், ஹீரோ டு ஹீரோ, நியாகா டாருள் ஏசான் (நாடி), கோ டிஜிட்டல், ஐ-லெஸ்தாரி, ஐ- அக்ரோ, ஐ-பெர்மூசிம் ஆகிய அந்த ஏழு திட்டங்களை அந்த தொகை உள்ளடக்கியிருக்கும் என்று அந்த அறவாரியத்தின் மேம்பாட்டு நிர்வாகி முகமது ரிட்வான் அஸ்மாரா கூறினார்.

தொழில்முனைவோரின் வர்த்தக நடவடிக்கைளுக்கு நிதி தேவைப்படுவதால் திரும்பப் பெறும் கடனுதவித் தொகையை இவ்வாண்டில் அதிகரிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

இந்த இலக்கை அடைவதற்கு ஏதுவாக கடனைத் திரும்பச் செலுத்தி வெற்றி பெறுங்கள் எனும் இயக்கத்தை ஜனவரி முதல் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி வரை நடத்துவதோடு கடன் மறுசீரமைப்புத் திட்டத்தையும் அமல்படுத்தி வருவதாக அவர் சொன்னார்.

கடன் தொகையை முறையாகச் செலுத்தி வரும் தொழில் முனைவோர் இந்த இயக்கத்தில் இயல்பாக பங்கேற்க முடியும் என்பதோடு 20,000 வெள்ளிக்கும் மேற்பட்ட பரிசுகளை வெல்வதற்குரிய வாய்ப்பினையும் பெறுவர் என்றார் அவர்.

கடனைத் திரும்பச் செலுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கும் தொழில் முனைவோருக்கு உதவும் பொருட்டு கடன் சீரமைப்புத் திட்டத்தையும் நாங்கள் பரிந்துரைக்கிறோம். தங்களுக்கு சக்திக்கு ஏற்ற வகையில் கடன் தொகையை திரும்பச் செலுத்துவதற்குரிய வாய்ப்பினை இத்திட்டம் ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

கடன் தொகையை திரும்ப வசூலிப்பதில் மேலும் உற்சாகத்துடன் செயல்படுவதற்கு ஏதுவாக ஹிஜ்ரா பணியாளர்களுக்கு ஊக்குவிப்புச் சலுகைகளும் வழங்கப்படும் எனக் கூறிய அவர், 39,492 ஹிஜ்ரா உறுப்பினர்கள் கடன் தொகையை முறையாகச் செலுத்தி வருகின்றனர் என்றார்.


Pengarang :