NATIONAL

காவல்துறை அதிகாரிக்கு 100 ரிங்கிட் கையூட்டு கொடுத்து வங்கதேசத் தொழிலாளி கைது

புத்ராஜெயா, ஜன 30: காவல்துறை அதிகாரிக்கு 100 ரிங்கிட் கையூட்டு கொடுத்து தப்பிச் சென்ற வங்கதேசத் தொழிலாளியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம் ஏசிசி) நேற்று கைது செய்தது.

ஆதாரத்தின்படி, ஆய்வின் போது உரிமம் இல்லாமல் கார் ஓட்டியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு 30 வயதுடைய அந்நபர் காவல்துறை அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்துள்ளார்

இந்த நடவடிக்கையை தொடர்ந்து, காவல்துறையினர் அந்த நபரை நேற்று மதியம் 2 மணியளவில் புத்ராஜெயா வின் கூட்டரசு பிரதேசத்தின் எம் ஏசிசி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மாஜிஸ்திரேட் இர்சா சுலைக்கா ரோஹனுதீன் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எம்ஏசிசியின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டதை அடுத்து, அந்த நபர் இந்த செவ்வாய்கிழமை வரை மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதற்கிடையில், புத்ராஜெயா எம்ஏசிசி இயக்குனர் அஜிசுல் அஹ்மத் சர்காவியைத் தொடர்பு கொண்டபோது, அந்த நபர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார், மேலும் இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 17(பி) கீழ் விசாரிக்கப்பட்டது என்றார்.

குற்றங்களில் இருந்து தப்பிக்கும் நோக்கத்திற்காக எந்தவொரு சட்ட அமலாக்க நிறுவனத்திற்கும் தன்னிச்சையாக கையூட்டு கொடுக்க வேண்டாம் என்பதை இதுபோன்ற வழக்குகள் சமூகத்திற்கு நினைவூட்டுவதாக அவர் கூறினார்.

 – பெர்னாமா


Pengarang :