SELANGOR

சிலாங்கூர் சாரிங் பிளஸ் திட்டத்தில் பற்கள் மற்றும் காதுகள் தொடர்பான பரிசோதனைகள்

சுபாங் ஜெயா, ஜன 30: அடுத்த மாதம் தொடங்கும் சிலாங்கூர் சாரிங் பிளஸ் திட்டத்தில் பல் மற்றும் காது பரிசோதனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார எஸ்கோ டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் கூறுகையில் பரிசோதனைகளின் (ஸ்கிரீனிங் ) மூலம் பொதுமக்கள் நீண்ட கால பல், காதுகளின் பிரச்சனைகளுக்கு மருத்துவர்களை காணவும் பிரச்சனைகளை முன்னதாகவே கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு எந்த கிளினிக்கிலும் உடனடியாக சிகிச்சை பெற முடியும்.

“இந்த ஆண்டு நாங்கள் பற்கள் மற்றும் காதுகள் தொடர்பான பரிசோதனைகளைச் சிலாங்கூர் சாரிங் பிளஸ் திட்டத்தில் இணைத்துள்ளோம். நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை மாறாக பிரச்சனை உள்ளவர்களை மருத்துவரை சென்று காணுமாறு அறிவுறுத்துகிறோம்.

“நாங்கள் பரிசோதித்தப் பிறகு, நோயாளிகள் அரசு அல்லது தனியார் கிளினிக்குகளில் தொடர்ந்து சிகிச்சை பெறலாம். எனவே உடல் உபாதைகளில் இருந்து விடுபடலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினரான அவர், தேவைப்படுபவர்களுக்கு சரியான நுட்பங்களைக் கற்பிக்க பிசியோதெரபி சிகிச்சையும் ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.

சில முன்னேற்றங்களுடன் மாநில அரசின் இலவச சுகாதாரத் திட்டம் பிப்ரவரி 18 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்று டாக்டர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மாநில அரசு சிலாங்கூர் சாரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது குடியிருப்பாளர்களுக்கு நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது.


Pengarang :