NATIONAL

அம்பாங் இலகு இரயில் டிரான்சிட் (எல்ஆர்டி) பாதையைப் பழுதுபார்க்கும் பணிகள் இரண்டு வாரங்களுக்குள் நிறைவடையும்

கிள்ளான், பிப் 2: நகர அருகே உள்ள அம்பாங் இலகு இரயில் டிரான்சிட் (எல்ஆர்டி) சேவையின் பாதையைப் பழுது பார்க்கும் பணிகள் முதல் கட்டமாக இரண்டு வாரங்களுக்குள் நிறைவடையும் என்று போக்குவரத்து அமைச்சகம் (எம்ஓடி) எதிர்பார்க்கிறது. .

கட்டுமானப் பாதிப்பைப் பிரசாரண மலேசியா பெர்ஹாட் (பிரசாரண) நியமித்த தரப்பினர் மூலம் கூடிய விரைவில் சரி செய்யப்படும் என்று  அமைச்சர் அந்தோணி லோக் சியு ஃபோக் கூறினார்.

“பழுது பார்க்கும் செயல்முறை இரண்டு கட்டங்களை உள்ளடக்கியது, அதாவது முதல் கட்டம் பழுது பார்ப்பதையும் அப்பாதை பயன்படுத்த பாதுகாப்பானதாக இருப்பதையும் உறுதி செய்யும். அதே நேரத்தில் கட்டமைப்பு வலுவாக இருப்பதை உறுதி செய்வதே இரண்டாவது கட்டமாகும்” என்று அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட இரண்டு நிலையங்களும் அதாவது நகர நிலையமும் மற்றும் மஸ்ஜித் ஜமேக் நிலையமும் பயனர்கள் பயன்படுத்த பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டால் மட்டுமே திறக்கப்படும் என்று லோக் கூறினார்.

“எங்களுக்கு வேறு வழியில்லை, ஏனெனில் இது பாதுகாப்பு சிக்கல்களை உள்ளடக்கியது. எனவே, பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த பழுது பார்க்கும் திட்டத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பேன்.

இதற்கிடையில், சாலைப் பயனாளர்களிடையே விபத்துக்கள் மற்றும் இறப்பு விகிதத்தைக் குறைக்க பாதுகாப்பு நிபுணர்கள் பரிந்துரைத்த படி, மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான சிறப்பு வழி அல்லது ‘நீல பாதை’ என்ற கருத்தை அமைச்சகம் முழுமையாக ஆதரிக்கிறது என்று லோக் கூறினார்.

இருப்பினும், சாலை கட்டுமானம் மற்றும் மேம்படுத்தும் பணிகள் பொதுப்பணி அமைச்சகத்தின் (கேகேஆர்) அதிகார வரம்பிற்கு உட்பட்டது. மேலும், நெடுஞ்சாலைகள் மற்றும் கூட்டாட்சி சாலைகளில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப் பட்டால் அதற்கு பெரிய முதலீடு தேவைப்படும் என்றார்.

– பெர்னாமா


Pengarang :