SELANGOR

சிட்டிசன் இ-பெயிமெண்ட் (Citizen E-Payment (CEPat)இல் மொத்தம் 103,655 பயனர்கள் பதிவு செய்துள்ளனர்

ஷா ஆலம், பிப் 8: 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு கட்டணப் பயன்பாடான சிட்டிசன் இ-பெயிமெண்ட் (Citizen E-Payment (CEPat)இல் மொத்தம் 103,655 பயனர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி யூனிட்டின் (SSDU) நிர்வாக இயக்குனர் கூறுகையில், டிசம்பர் 31 வரை 2.18 மில்லியன் பரிவர்த்தனைகள் சிட்டிசன் இ-பெயிமெண்ட் செயலியால் நடத்தப்பட்டுள்ளன.

“இந்த பயன்பாட்டின் அளவு காலப்போக்கில் அதிகரிக்கிறது. அதிகமான சிலாங்கூர் மக்கள் இதைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் இந்த மின்னணு கட்டணப் பயன்பாட்டைத் தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகிறோம்” என்று அஹ்மத் அக்மல் ஹம்சாவைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இதற்கிடையில், இந்த செயலி மூலம்  வீட்டு வரி மற்றும் நில வரியைச் செலுத்தும் வசதியைத் தனது தரப்பு அறிமுகப்படுத்தும் என்றார்.

“அம்முறையை மேம்படுத்துவதற்காகச் சிலாங்கூர் நிலம் மற்றும் சுரங்க அலுவலகம் (PTGS) மூலம் பணம் செலுத்தும் வழிமுறை ஒன்றைத் தொடங்குவோம். அதற்காக நிலம் மற்றும் சுரங்க அலுவலக அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

1 ஆகஸ்ட் 2019 அன்று தொடங்கப்பட்டது சிட்டிசன் இ-பெயிமெண்ட், உரிம விண்ணப்பம், மதிப்பீட்டு வரி செலுத்துதல், அபராதம், பார்க்கிங் மற்றும் பில்களைச் செலுத்துதல் போன்ற வசதிகளை வழங்குகிறது.

ரொக்கமில்லாப் பரிவர்த்தனையை ஆண்ட்ராய்டு பயனர்கள் “PlayStore“ மற்றும் iOS க்கு “AppStore“ வழியாக பதிவிறக்கம் செய்யலாம்.


Pengarang :