SELANGOR

ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற 4,622 மூத்தக் குடிமக்கள் மற்றும் ஊனமுற்றோர் தகுதி பெற்றுள்ளனர் – கோலக் குபூ பாரு மாநிலச் சட்டமன்றம்

ஷா ஆலம், பிப் 8: கோலக் குபூ பாரு மாநிலச் சட்டமன்றத்தில் (DUN) மொத்தம் 4,622 மூத்தக் குடிமக்கள் மற்றும் ஊனமுற்றோர் (OKU) RM150 மதிப்புள்ள ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களை ஸ்கிம் மெஸ்ர உசிய எமாஸ் திட்டத்தின் கீழ் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

அதன் பிரதிநிதி லீ கீ ஹியோங் கூறுகையில், கடந்த ஜனவரி முதல், அவரது தரப்பு 2,826 வவுச்சர்கள் வழங்கியுள்ளது.

“இந்த ஆண்டு, “SMUE“ பங்கேற்பாளர்களின் பிறந்த மாதத்தின் அடிப்படையில் வவுச்சர்கள் வழங்க மாட்டோம், மாறாக பெறுநர்கள் எந்நேரத்திலும் தங்கள் வவுச்சர்களைக் கோலக் குபூ பாரு மாநிலச் சட்டமன்றத்தின் சமூகச் சேவை மையத்தில் பெற்றுக்கொள்ளலாம்,“ என்றார்.

“இன்னும் வவுச்சர்களை பெற்றுக் கொள்ளாத முதியவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் தங்கள் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு வரலாம்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜோம் ஷாப்பிங் வவுச்சர் பெறுபவர்களுக்கான குடும்ப வருமான தகுதி இந்த ஆண்டு முதல் மாதத்திற்கு RM2,000 லிருந்து RM3,000 ஆக உயர்த்தப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.


Pengarang :