NATIONAL

பட்ஜெட் 2023 மக்கள் எதிர்நோக்கும் தற்போதைய பொருளாதார சவால்களைச் சமாளிக்க – பிரதமர்

புத்ராஜெயா, பிப் 8: பட்ஜெட் 2023 தற்போதைய பொருளாதார சவால்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும், இருப்பினும் நாட்டின் வளர்ச்சியை உறுதிபடுத்துவது, நாட்டிற்கு முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் மலேசியர்களின் நலனைப் பேணுதல் போன்றவற்றைச் செயல்படுத்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கூறினார்.

2023 பட்ஜெட்டில், போட்டித்திறன், வணிக வேகம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் இயற்கை வளங்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பல புதிய முயற்சிகளை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக நிதியமைச்சர் அன்வார் கூறினார்.

“இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாமுடன் ஒப்பிடும்போது நாம் பின் தங்கியுள்ளோம். நாம் போட்டி தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்ய இந்த விஷயங்களைச் சமாளிக்க வேண்டும், ”என்று அவர் மாதாந்திர கூட்டத்தில் கூறினார்.

இருப்பினும், 2023 பட்ஜெட்டை உருவாக்குவதில் உள்ள மிகப்பெரிய சவாலானது முதலீட்டாளர்களை ஈர்ப்பது மற்றும் மலேசியர்களை, குறிப்பாகப் பரம ஏழைகளை பாதுகாப்பதற்கும் ஒரு சமநிலையான கொள்கையைக் கண்டறிவதாகும்.

“எங்கள் கவனம் இனம் அல்லது மாவட்டம் பற்றியது அல்ல. எங்கள் கவனம் மக்கள்தான்,“ என்று அன்வார் குறிப்பிட்டார்.


Pengarang :