SELANGOR

இலவசப் பற்றுச் சீட்டுகளுக்கு 370 புதிய விண்ணப்பங்கள்- ஈஜோக் தொகுதி பெற்றது

கோல சிலாங்கூர், பிப் 9- மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்டத்திற்கு (எஸ்.எம்.யு.இ.) கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 370 புதிய விண்ணப்பங்களை ஈஜோக் தொகுதி பெற்றுள்ளது.

இந்த ஜோம் ஷோப்பிங் திட்டத்திற்கான பற்றுச் சீட்டுகளின் மதிப்பு 100 வெள்ளியிலிருந்து 150 வெள்ளியாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அதிகளவிலான விண்ணப்பங்களைத் தாங்கள் பெற்று வருவதாக ஈஜோக் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் பிரதிநிதி அஸ்லி ஹசான் கூறினார்.

நாங்கள் தினமும் புதிய விண்ணப்பங்களைப் பெற்று வருகிறோம். இதற்கு முன்னர் கிடைத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையே 8,000த்தைத் தாண்டும என்று அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்குத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை ஈஜோக் தொகுதியில் அதிகமாக உள்ளது. அவர்களின் சுமையைக் குறைப்பதற்குத் தேவையான உதவிகளை வழங்க முடியும் என நாங்கள் நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள டேவான் ஜெயா செத்தியாவில் நடைபெற்ற ஈஜோக் தொகுதி நிலையிலான ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த பற்றுச்சீட்டுகள் வரும் 18ஆம் தேதி தொடங்கி கட்டங்க கட்டமாக விநியோகிக்கப்படும் என்றும் அவர் சொன்னார். பற்றுச் சீட்டுகளை விநியோகிக்கும் பணியைக் கிராமத் தலைவர்கள் மேற்கொள்வர். இந்தப் பணியில் அவர்களுக்குக் கிராம செயல்குழு உறுப்பினர்கள் உதவி வழங்குவர் என்றார் அவர்.


Pengarang :