NATIONAL

இ.பி.எஃப் சேமிப்பை மீட்காமல் மக்களின் சுமையைக் குறைக்கும் வழிகளை அரசு ஆராய்கிறது- பிரதமர்

கோல சிலாங்கூர், பிப் 9- ஊழியர் சேம நிதியிலிருந்து (இ.பி.எஃப்.) பணத்தை மீட்காமல் மக்கள் எதிர்நோக்கும் நிதிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

அரசாங்கத்தின் அந்த திட்டம் இ.பி.எஃப். சந்தாதாரர்களின் ஓய்வு காலச் சேமிப்புக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இது குறித்து நங்கள் ஏற்கனவே விளக்கி விட்டோம். ஏற்கனவே சேமிப்பிலிருந்து நிறைய தொகையை மீட்டு விட்டோம். இப்போது 10,000 வெள்ளி, 5,000 வெள்ளிதான் எஞ்சியிருக்கிறது. எஞ்சிய 10,000 அல்லது 5,000 வெள்ளியையும் மீட்டு விட்டால் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஓய்வு பெறும் போது என்ன செய்யக் போகிறோம் என அவர்
கேள்வியெழுப்பினார்.

பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பணம் மீட்கப்படுகிறது என்பது உண்மைதான். ஒரு வேளை சேமிப்பில் பணம் இல்லாவிட்டால் அல்லது 5,000 வெள்ளி, 3,000 வெள்ளி மட்டுமே மிஞ்சியிருந்தால் இரண்டு, மூன்று ஆண்டுகளில் ஓய்வு பெறும் போது எப்படி சமாளிக்கப் போகிறோம் என்றார் அவர்.

சிலாங்கூர் பல்கலைக்கழகத்தின் பெஸ்தாரி ஜெயா வளாகத்தில் இன்று நடைபெற்ற சித்திக் பாட்சில் மூத்த விரிவுரை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

பணி ஓய்வுக்குப் பின்னர் மக்களுக்குச் சுமை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகச் சேம நிதியை மீட்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :