NATIONAL

நீரில் மூழ்கிய சிறப்பு அதிரடிப் படைப்பிரிவின் கமாண்டோ வீரர் ஒருவரைத் தேடும் மற்றும் மீட்கும் (எஸ்ஏஆர்) நடவடிக்கைக்கு இந்தோனேசியாவின் உதவி தேவை 

மலாக்கா, பிப் 9: கடந்த செவ்வாய், புலாவ் உன்டான் கடலில் நீச்சல் பயிற்சியின் போது நீரில் மூழ்கி இறந்ததாக அஞ்சப்படும் 25 வயதுடைய எல்/சிபிஎல் எட்ரின் பைன்திம் (25) என்ற சிறப்பு அதிரடிப் படைப்பிரிவின் கமாண்டோ வீரர் ஒருவரைத் தேடும் மற்றும் மீட்கும் (எஸ்ஏஆர்) நடவடிக்கைக்கு உதவ மலேசியக் கடல்சார் அமலாக்க நிறுவனம் (ஏபிஎம்எம்) இந்தோனேசியாவின் உதவியைக் கோரியுள்ளது.

மலாக்கா மலேசியக் கடல்சார் அமலாக்க முகமையின் (APMM) இயக்குநர் மற்றும் நெகிரி செம்பிலான் கடல்சார் கேப்டன் இஸ்கண்டார் இஷாக் கூறுகையில், புத்ராஜெயா கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (MRCC) மூலம் இந்தோனேசியத் தேசியத் தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்திற்கு (BASARNAS) இச்சமபவம் தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டது.

“தேடல் மற்றும் மீட்பு துறையின் (SAROPS) தகவல்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர் அண்டை நாட்டின் நீரில் அடித்துச் செல்லப் படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

“பாதிக்கப்பட்டவரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது என்று ஒரு அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

“சம்பவம் தொடர்பான ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அதை மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் கடல்சார் செயற்பாட்டு மையத்தை 06-3876730 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.  மேலும் MERS 999 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும்.

மலேசிய ஆயுதப் படைகள் (ATM), ராயல் மலேசியன் காவல்துறை (PDRM) மற்றும் மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) போன்ற பல்வேறு நிறுவனங்களின் ஈடுபாட்டுடன் புலாவ் பெசாரில் “CARILAMAT“ முன்னோக்கி தளம் (PHC) திறக்கப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :