SELANGOR

டிங்கி சம்பவங்களைக் குறைக்கப் போர்ட் கிள்ளான் மலிவு விற்பனையில் சிலாங்கூர் சமூகச் சுகாதாரத் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்

கிள்ளான், பிப் 13: டிங்கி காய்ச்சலைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காகச் சிலாங்கூர் சமூகச் சுகாதாரத் தன்னார்வாளர்களைப் (சுக்கா) போர்ட் கிள்ளான் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் (ஏடிஎன்) மலிவு விற்பனை (ஜேஇஆர்) நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்தனர்.

சுக்கா போர்ட் கிள்ளான் தற்போது ஏடிஸ் கொசுவை ஒழிப்பதற்கும், அதன் மூலம் பரவும் டிங்கி சம்பவங்களைக் குறைப்பதற்கும் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது என்று அஸ்மிசாம் சஹாமான் யுரி கூறினார்.

“தரவுகளின் அடிப்படையில், போர்ட் கிள்ளான் டிங்கி காய்ச்சல் சம்பவங்களை மிக அதிகமாகப் பதிவு செய்துள்ளது. ஏனெனில் அங்கு ஏடிஸ் கொசுவின் இனப்பெருக்கம் நன்கு கட்டுப்படுத்தப்படவில்லை.

“எனவே, இந்த பகுதியில் உள்ள சுக்கா இயக்கம் கிள்ளான் சுகாதார அலுவலகத்துடன் இணைந்து, குடியிருப்பாளர்கள் தங்களுடைய குடியிருப்புப் பகுதிகளை ஐந்து நிமிடங்களில் சுத்தம் செய்து தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய நினைவூட்டுவதற்காகப் பிரச்சாரம் செய்து வருகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், போர்ட் கிள்ளானில் உள்ள பல தொழில்முனைவோரை அவரவர் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த தனது தரப்பு அவர்களை மலிவு விற்பனை நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்ததாக அஸ்மிசாம் விளக்கினார்.

ஆகஸ்ட் 2021 இல் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் சுக்கா  நிறுவப்பட்டு தொடங்கப்பட்டது. 56 மாநிலச் சட்டமன்றங்களில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கியது சுக்கா. 1,800க்கும் மேற்பட்ட தனிநபர்கள் இணைந்து, மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சுக்கா பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :