SELANGOR

நீர் விநியோகத் தடை 89 சதவீதம் மீண்டுவிட்டது

ஷா ஆலம், பிப். 13: ரத்தாவ் பஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (எல்ஆர்ஏ) முகப்பில் ஏற்பட்ட மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நீர் வழங்கல் மறுசீரமைப்பு நிலை இன்று காலை 6 மணி நிலவரப்படி 89 சதவீதத்தை எட்டியுள்ளது.

ஆயர் சிலாங்கூர் (Air Selangor) நிர்வாகம் உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் ஆகிய பகுதிகள் முழுமையாக மீண்டு விட்ட நிலையில் கோலா சிலாங்கூர் 99 சதவிகிதம், கிள்ளான் மற்றும் ஷா ஆலம் (83 சதவிகிதம்) மற்றும் கோலா லங்காட் (இன்னும் மீளவில்லை) என்றும் தெரிவித்தது.

“தண்ணீர் விநியோகத்தை மீட்டெடுப்பதற்கான காலம் பயனரின் இருப்பிடம் மற்றும் தூரத்தைப் பொறுத்து ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயனர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியலை https://hentitugas.airselangor.com/ என்ற இணையத்தளத்தின் வழி பெறலாம்” என்று முகநூல் மூலம் ஆயர் சிலங்கூர் தெரிவித்துள்ளது.

இன்னும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு செயல்முறை திட்டமிட்டபடி சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய, நீர் விநியோகத்தைப் பெற்ற பயனர்களை விவேகத்துடன் அதைப் பயன்படுத்துமாறு ஆயர் சிலாங்கூர் கேட்டுக்கொள்கிறது.

நேற்று சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம், (LUAS) கனரக இயந்திரங்களின் (டீசல்) நடவடிக்கைகளினால் வெளியேறும் எண்ணெய் கசிவுகளால் ஏற்படும் துர்நாற்றத்தை கண்டறிந்தது. அதைத் தொடர்ந்து, திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடங்கல் ஏற்பட்டது.


Pengarang :