SELANGOR

பள்ளி விடுமுறையை முன்னிட்டு இலவச ஜூனியர் ‘கேம்ஸ்’  பட்டறை – எம்பிஐ

ஷா ஆலம், பிப் 13: சிலாங்கூர் மந்திரி புசார் கட்டமைப்பு அல்லது எம்பிஐ, பிப்ரவரி 21 முதல் மூன்று நாட்களுக்குப் பள்ளி விடுமுறையை முன்னிட்டு இலவச ஜூனியர் ‘கேம்ஸ்’  பட்டறை ஏற்பாடு செய்துள்ளது.

10 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.  இத்திட்டத்திற்கு RM18,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டறை இங்குள்ள ராஜா துன் உடா நூலகத்தில் நடைபெறவுள்ளதாக அதன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புத் தலைவர் அஹ்மத் அஸ்ரி ஜைனல் நோர் தெரிவித்தார்.

“சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) மற்றும் ஷா ஆலம் தீபகற்ப மலாய் மாணவர் சங்கம் (ஜிபிஎம்எஸ்) இணைந்து, சுயமாக விளையாட்டுகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கத்துடன் இந்த பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் பள்ளி விடுமுறையைப் பயனுள்ள வழியில் செலவிடவும் இத்திட்டம் உதவும்.

“ஒவ்வொரு நாளும் 20 பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொள்ள முடியும். ஆனால் மாணவர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தால் ஒவ்வொரு அமர்வுக்கும் கூடுதலாக 10 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

அஹ்மத் அஸ்ரி கூறுகையில், சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மாணவரும் மொபைல் அப்ளிகேஷன்களை உருவாக்கும் உள்ளூர் நிறுவனமான ராக்ஸ்பிட் மூலம் வழிநடத்தப்படுவர்.

இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் மாநிலச் சட்டமன்ற (DUN) அளவில் இந்த பட்டறையை தொடர எம்பிஐ திட்டமிட்டுள்ளது,” என்று நோர் கூறினார்.


Pengarang :