NATIONAL

சீரமைப்பு செய்யப்பட வேண்டிய 830 பள்ளிகளை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது

புத்ராஜெயா, பிப் 14- இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை, மாற்றப்பட வேண்டிய அல்லது மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டிய கட்டிடங்களைக் கொண்ட 830 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கல்வியமைச்சு கூறியது.

கட்டிடங்களின் பழுதடைந்த நிலையைக் அளவிடுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கிரேட் அளவுகோளின் படி 6 மற்றும 7 என்ற அளவில் இருக்கும் பள்ளிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கை
ஒன்று கூறியது.

பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றவை என மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக் கல்வி இலாகாவினால் வகைப்படுத்தப்பட்ட கட்டிடங்கள் அளவு கோளில் ஆறாகவும் பொது பணி இலாகாவினால் அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட கட்டிடங்கள் அளவு கோளில் ஏழாவும்
நிர்ணயிக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் உகந்த சூழலில் கல்வி கற்பதற்குரிய வசதியை ஏற்படுத்தித் தருவது கல்வியமைச்சின் கடப்பாடாக உள்ளதாகவும் அவ்வறிக்கை தெரிவித்தது.


Pengarang :