SELANGOR

 குறைந்த கார்பன் நகரத் திட்டம் தொடர்ந்து பலப்படுத்தப்படுகிறது

ஷா ஆலம், பிப் 21: இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சு குறைந்த கார்பன் நகரத்தை நோக்கிய மாற்றத்தை உறுதி செய்வதற்குக் குறைந்த கார்பன் நகரத் திட்டத்தைத் தொடர்ந்து வலுப்படுத்துகிறது.

அதன் மந்திரி நிக் நஸ்மி நிக் அமாட், இந்தத் திட்டத்தில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளூர் அதிகாரிகள் (பிபிடி) இடையே உள்ள ஒத்துழைப்பு மிக முக்கியம் என்றார்.

குறைந்த கார்பன் நகரத்திற்கான அம்சங்களை நடைமுறைப்படுத்த, ஒரு நகரத்தின் சமூகப் பொருளாதார மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் உள்கட்டமைப்பைத் திட்டமிடுவதில் மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பங்கு மிகவும் முக்கியமானது என்றார்.

“நிலையான ஆற்றல், குறைந்த கார்பன் இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்புகள், கழிவு மேலாண்மை, மறுசுழற்சி, நீர் செயல்திறன் மற்றும் திறன்மிக்க நகரங்களை உருவாக்குதல் ஆகியவற்றை வலியுறுத்தும் தேசிய மற்றும் உள்ளூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு உள்ளூர் அதிகாரச்சபை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,“ என அவர் தெரிவித்தார்.


Pengarang :