SELANGOR

420 மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பும் உதவியைப் பெறுவர் – மேரு மாநிலச் சட்டமன்றம்

ஷா ஆலம், பிப் 21: மேரு மாநிலச் சட்டமன்றத்தில் மொத்தம் 420 ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் இந்த மார்ச் மாதம் பள்ளிக்குத் திரும்பும் உதவி பெறுவார்கள்.

சிலாங்கூர் மந்திரி புசார் அல்லது எம்பிஐ நிதியுதவியில் 300 மாணவர்கள் RM100 பெறுவார்கள். மேலும், 100 மாணவர்கள் மாநிலச் சட்டமன்றத்தில் வழங்கப்படும் RM100 மதிப்புள்ள “புசாட் பக்கையான் ஹரி-ஹரி“ வவுச்சர்களைப் பெறுவார்கள் என்று மேருவின் பிரதிநிதி கூறினார்.

தொடர்ந்து, 20 மாணவர்கள் சிலாங்கூர் பெண்கள் நலன் மற்றும் தொண்டு நிறுவனத்திடமிருந்து (Pekawanis) RM150 பெறுவார்கள்.

“பள்ளி அமர்வு தொடங்கும் முன் உதவிகள் கட்டங்கட்டமாக வழங்கப்படும்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இந்த திட்டத்தின் வழி பெற்றோரின் சுமையைக் குறைக்கவும், மாணவர்களுக்குச் சிறந்த பள்ளி உடைகள் மற்றும் அவர்களின் கற்றலுக்கு உதவும் பொருத்தமான பள்ளி உபகரணங்களைப் பெற உதவுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று முகமட் பக்ருல் ராசி விளக்கினார்.

பள்ளித் தேவைகளை வழங்கி B40 குடும்பங்களின் சுமையைக் குறைக்க ஒவ்வொரு மாநிலச் சட்டமன்றத்திற்கும் RM30,000 ஒதுக்கீட்டை மாநகராட்சி வழங்குகிறது.


Pengarang :