NATIONAL

டிங்கி காய்ச்சலால் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன

புத்ராஜெயா, பிப் 21 – இந்த ஆண்டு பிப்ரவரி 12 முதல் 18 வரை ஏழாவது தொற்றுநோய் வாரத்தில் டிங்கி காய்ச்சலால் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் முந்தைய வாரத்தில் 1,967 என பதிவாகி இருந்த வேளையில் தற்போது 9.3 சதவீதம் அதிகரித்து 2,149 சம்பவங்களாக உள்ளது.

“டிங்கி காய்ச்சல் காரணமாக மொத்தம் 13 இறப்புகள் பதிவாகியுள்ளன,” என்று டாக்டர் நூர் ஹிஷாம் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கூற்றுப்படி, கடந்த வாரம் சுமார் 79 ( ஹாட்ஸ்பாட்) பாதிப்பு மிக்க இடங்கள் பதிவாகியுள்ளன. அவை சிலாங்கூர் (53), சபா (20), கோலாலம்பூர், புத்ராஜெயா (நான்கு) மற்றும் பினாங்கு (இரண்டு) ஆகும்.

மேலும், இந்த ஆண்டு ஏழாவது தொற்றுநோய் வாரத்தில் எட்டு சிக்குன்குனியா சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

– பெர்னாமா


Pengarang :