NATIONAL

இ-ஸ்போர்ட்ஸ் கேம் மேம்பாட்டுத்துறையை ஒரு தொழிலாக ஆராய இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்

ஷா ஆலம், பிப் 22: மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இந்த நாட்டில் சிறந்த வாய்ப்பைக் கொண்டுள்ள இ-ஸ்போர்ட்ஸ் கேம் மேம்பாட்டுத்துறையை ஒரு தொழிலாக ஆராய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

உள்ளூர் மொபைல் அப்ளிகேஷன் நிறுவனமான “RaxBit“ இன் நிறுவனர் மற்றும் மேலாளர் கூறுகையில், மென்பொருளின் தற்போதைய பரிணாமம், குறியீடு இல்லாமல் தங்கள் சொந்த விளையாட்டுகளை (கேம்) உருவாக்குவதை எளிதாக்குகிறது மற்றும் அதன்வழி நல்ல வருமானத்தையும் ஈட்ட முடியும்.

“மலேசியாவில் கேமிங் தொழில் மிகவும் விரிவானது, குறிப்பாக இ-ஸ்போர்ட்ஸ். தொழில்நுட்பத்தின் புழக்கத்தில், ஆர்வமும் படைப்பாற்றலும் இருக்கும் வரை, குறியீட்டு முறை இல்லாமல் கூட சொந்த கேம்களை உருவாக்க முடியும்,” என்று  ரஃபிக் ஷர்மன் கூறினார்.

ராஜா துன் உடா நூலகத்தில் 25 ஆரம்பப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ ஏற்பாடு செய்திருந்த “பினா கேம்ஸ்“ பட்டறைக்கு அவர் வருகை புரிந்திருந்தார்.

காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் பில்பாக்ஸ் மென்பொருளைப் பயன்படுத்தி சாகச விளையாட்டுகளை உருவாக்கும் முறையைக் கற்றுக் கொண்டதாக ரஃபிக் கூறினார்.

பட்டறையின் முடிவில், பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த விளையாட்டுகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிவார்கள் என்று நம்பப்படுகிறது.


Pengarang :