NATIONAL

குழந்தை பராமரிப்பு மையங்களில் மூன்று துஷ்பிரயோகச் சம்பவங்கள்

ஷா ஆலம், பிப் 22: 2020 முதல் கடந்த ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட குழந்தை பராமரிப்பு மையங்களில் குழந்தைகள் தாக்கப் பட்ட மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குடும்பம் மற்றும் சமூக அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறுகையில், இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இச்சம்பவங்களை அவரது தரப்பு இன்னும் தீவிரமாக எடுத்துக் கொண்டது என்றார்.

“சட்டம் 506 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட 1,248 குழந்தை பராமரிப்பு மையங்களில் மூன்று துஷ்பிரயோக சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது” என்று அவர் இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

குழந்தைகள் தாக்கப்படும் சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் ஒன்று குழந்தை பராமரிப்பு மையங்கள் எப்போதும் சட்டத்திற்கு இணங்குவதை உறுதி செய்வதாகும். அதில் அவ்வப்போது மற்றும் அறிவிக்கப்படாதக் கண்காணிப்பு சோதனையும் அடங்கும் என்று சந்துபோங் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

“சட்டத்தை மீறும் மையங்கள் மீது அமலாக்க நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மேலும், இத்துறையின் கண்களாகவும் காதுகளாகவும் சமூகம் விளங்க வேண்டி, அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அமைச்சு நடத்தியுள்ளது,“ என்றார்.

“பதிவு செய்யப் படாதக் குழந்தை பராமரிப்பு மையங்கள் மீது அமைச்சகம் அமலாக்க நடவடிக்கை எடுக்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :