SELANGOR

சிறு வணிகர்கள் மலிவு விற்பனை திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு – குவாங் தொகுதி

கோம்பாக், பிப் 23: குவாங் மாநிலச் சட்டமன்றம் (DUN), சிறு வணிகர்களுக்கு வருமானம் ஈட்ட உதவும் வகையில் மலிவு விற்பனை திட்டத்தில் பங்கேற்க அனுமதித்தது.

அதன் ஒருங்கிணைப்பாளர் சலாசியா டிசா கூறுகையில், இந்த நடவடிக்கை வருகையாளர்களுக்குக் கோழி, மீன் மற்றும் முட்டை போன்ற அடிப்படை பொருட்களுடன் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் வாங்கும் வாய்ப்பை வழங்குகிறது.

“நேற்று, பாவ், ரொட்டி சானாய் மற்றும் வாழைப்பழம் விற்பனையாளர்கள் மெர்டேக மண்டபத்தில் நடைபெற்ற குவாங் தொகுதிக்கான மலிவு விற்பனையில் பங்கேற்றனர்.

இன்றும் நாங்கள் சிறு வியாபாரிகளை அழைத்துள்ளோம்.  அவர்கள் சோளம் மற்றும் அன்னாசியை விற்பனை செய்கிறார்கள். “முடிந்தால், நாங்கள் பல வணிகர்களைக் கொண்டு வர விரும்புகிறோம், ஆனால் இட பற்றாக்குறை காரணமாக, நாங்கள் அதை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

எதிர்காலத்தில் மேலும் சிறு வணிகர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்,” என்றார்.

மலிவு விற்பனை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்கள் நடத்தப்பட்டது. அதன் மூலம் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் பயனடைந்தனர். அதனை தொடர்ந்து இத்திட்டம் மாநில அரசால் ஜனவரி 15 முதல் மே வரை 1,200 இடங்களில் நடத்தப்படவுள்ளது.

பொதுமக்கள் அவ்வப்போது விற்பனை இடங்களைப் பற்றிய அறிந்து கொள்ள linktr.ee/myPKPS  என்ற இணைப்பைப் பார்வையிடலாம்.


Pengarang :