NATIONAL

உலு லங்காட்டில் இரண்டு புதிய பள்ளிகள்

ஷா ஆலம், பிப் 24: 11வது மலேசியத் திட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு புதிய பள்ளிகளின் கட்டுமான பணிகள் முடிவடைந்த பிறகு, உலு லங்காட்டில் மாணவர்கள் நெரிசல் பிரச்சனையைச் சமாளிக்க முடியும் என்று கல்வி அமைச்சர் கூறினார்.

தாமான் பிளாங்கி, செமினி தேசியப் பள்ளி இன்னும் கட்டுமானத்தில் இருப்பதாகவும் தாமான் சூத்ரா, காஜாங் தேசியப் பள்ளி கட்டுமானத்திற்கு முந்தைய கட்டத்தில் இருப்பதாகவும் பட்லினா சிடேக் கூறினார்.

“மேலும், உலு லங்காட்டில் உள்ள கன்தான் பெர்மாய் தேசியப் பள்ளியில் ஆறு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றார்.

“இருப்பினும், இது தற்போதைய நிதி நிலையைப் பொறுத்தது. இந்த கட்டுமானத்தின் மூலம், உலு லங்காட்டில் மாணவர்களின் நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னதாக, பாராளுமன்றத்தில் சில பள்ளிகளின் கட்டுமான நிலை குறித்து உலு லங்காட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சானி ஹம்சான் விளக்கம் கேட்டார். அதற்கு விளக்கம் தரும் வகையில் கல்வி அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.


Pengarang :