SELANGOR

மேலும் 14 முறை மலிவு விற்பனை ஏற்பாடு – பண்டான் இண்டா தொகுதி

செராஸ், பிப் 24: பண்டான் இண்டா தொகுதியின் சமூகச் சேவை மையம் (PKM) அடுத்த மார்ச் மாதம் முழுவதும் குடியிருப்பாளர்களுக்காக மேலும் 14 முறை மலிவு விற்பனையை ஏற்பாடு செய்யவுள்ளது.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து, இந்த விற்பனை வாரத்திற்குச் சராசரியாக மூன்று முறை நடத்தப்படும் என்று பண்டான் இண்டா மாநிலச் சட்டமன்ற பி.கே.எம் மேலாளர் நரிசா சைன் தெரிவித்தார்.

“அதிக முறை மலிவு விற்பனையை நடத்துவதற்கான குடியிருப்பாளர்களின் கோரிக்கையை நாங்கள் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறோம். இந்த திட்டம் வசதி குறைந்தவர்களின் (B40) சுமையைக் குறைக்க உதவும் என்று நம்புகிறோம்.

“முன்னதாக, இங்குள்ள 4,000 குடும்பங்கள் மலிவு விற்பனையால் பயனடைந்துள்ளன,” என்று அவர் கூறினார். நரிசாவின் கூற்றுப்படி, கடந்த ஜனவரி முதல் இப்போது வரை, அவரது தரப்பு ஏழு முறை இந்த மலிவு விற்பனையை நடத்தியுள்ளது. மேலும் பிப்ரவரி 28 அன்று செராஸ் இண்டாவில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

“ஒவ்வொரு முறையும் சராசரியாக 500 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வரவேற்பு தருவது ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது,” என்று அவர் விளக்கினார்.

பொதுமக்கள் அவ்வப்போது விற்பனை இடங்களைப் பற்றிய அறிய linktr.ee/myPKPS என்ற இணைப்பை அல்லது சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழக முகநூலைப் பார்வையிடலாம்.


Pengarang :