SELANGOR

மலிவு விற்பனையில் 10 தன்னார்வலர்கள் நியமனம் – கின்றாரா தொகுதி

பூச்சோங், பிப் 24: மாநில அரசின் திட்டமான மலிவு விற்பனை சுமூகமாக நடைபெறுவதற்கு கின்றாரா தொகுதியின் சமூகச் சேவை மைய அலுவலகம் 10 தன்னார்வலர்களை ஏற்பாடு செய்துள்ளது.

அதன் மேற்பார்வையாளர் ரேச்சல் லீ பூய் வோன் கூறுகையில், சம்பந்தப்பட்ட தன்னார்வலர்கள் வருகையாளர்களின் உடைமைகளை அவர்களின் வாகனங்களுக்கு தூக்கிச் செல்ல உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

“பொருட்களை வாகனத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத வருகையாளர்கள் குறிப்பாக வயதானவர்களுக்கு இந்த தன்னார்வலர்கள் உதவுவதற்காக செயல்படுகிறார்கள்.

“அது மட்டுமின்றி, விற்பனைத் திட்டம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காகப் பொருட்களை பேக் செய்யவும், போக்குவரத்தைக் கவனித்துக் கொள்ளவும் அவர்கள் உதவுகிறார்கள்,” என்று அவரைச் சந்தித்தபோது கூறினார்.

இதற்கிடையில், மலிவு விற்பனைத் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றதாகவும், மக்கள் முன்கூட்டியே வரிசையில் நிற்கத் தயாராக இருப்பதாகவும் ரேச்சல் தெரிவித்தார்.

“குடியிருப்பாளர்கள் காலை 8.30 மணிக்கு வந்து, குறைந்த விலையில்  அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காகத் தங்கள் முறைக்காகக் காத்திருக்கிறார்கள்,,“ என்று மேலும் கூறினார்.


Pengarang :