NATIONAL

2023 பட்ஜெட்டில் மின் சிகிரெட்டுகளுக்குக் கலால் வரி

கோலாலம்பூர், பிப் 24: வேப் எனப்படும் மின் சிகிரெட்டுகளில் பயன்படுத்தப்படும் நிக்கோடின் அடங்கிய திரவம் அல்லது களிம்புக்குக் கலால் வரி விதிப்பது குறித்து
அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

மக்களையில் இன்று 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.

மேலும், மோசமான நிலையிலுள்ள பள்ளிகள் மற்றும் கிளினிக்குகள் மறுசீரமைப்புச் செய்யப்படும் என்றும் அவர் சொன்னார். 120 கோடி வெள்ளி ஒதுக்கீட்டில் மோசமான நிலையில் உள்ள 400 கிளினிக்குகள் மற்றும் 380 பள்ளிகளைச் சீரமைக்கும் பணி உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த மறுசீரமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காகச் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கிளினிக்குகளில் மேற்கொள்ளப்படும் குத்தகைப் பணிக்கான விலைப்புள்ளியின் உச்சவரம்பு 500,000 வெள்ளியிலிருந்து 10 லட்சம் வெள்ளியாக உயர்த்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :