NATIONAL

வெள்ளத் தடுப்பு மற்றும் ஜானா விபாவா திட்டங்கள் ரத்து

கோலாலம்பூர், பிப் 24 – சுமார் 1,500 கோடி வெள்ளி மதிப்பிலான வெள்ளத் தடுப்புத் திட்டம் மற்றும் 700 கோடி வெள்ளி மதிப்பிலான ஜானா விபாவா திட்டம் உள்பட நேரடி பேரத்தின் மூலம் வழங்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் ரத்து செய்யப்படும்.

மக்களவையில் இன்று 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.

கூட்டரசு சாலைகளைப் பராமரிப்பது மற்றும் தரம் உயர்த்துவதற்கு 270 கோடி வெள்ளி ஒதுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். சிறு திட்டங்களை ஜி1 முதல் ஜி4 வரையிலான பிரிவைச் சேர்ந்த சிறு குத்தகையாளர்கள் மேற்கொள்வதற்கு ஏதுவாக 30 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

கிராம மற்றும் புறநகர்ப்பகுதிகளில் புதிய சாலைகளை அமைப்பது மற்றும் நடப்பிலுள்ள சாலைகளை மேம்படுத்துவது ஆகிய பணிகளுக்காக 150 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் பழுதடைந்த சாலைகளைச் சீரமைப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 100,000 வெள்ளி வழங்கப்படும்.


Pengarang :