NATIONAL

மோட்டார் சைக்கிள், பயணிகள் வாகன லைசென்ஸ் சோதனைக் கட்டணம் ரத்து

கோலாலம்பூர், பிப் 24 – டாக்சி, பஸ், இ-ஹெய்லிங் எனப்படும் மின் அழைப்பு வாடகைக் கார் சேவை மற்றும் பி2 பிரிவு மோட்டார் சைக்கிள் சோதனைக் கட்டணத்தை அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

இதற்கான கட்டணங்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது அறிவித்தார்.

சிறு வணிகர்களுக்கான கடனுவித் திட்டம் நாட்டிலுள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்குப் பல்வேறு அரசு துறைகள் வாயிலாகக் கடனுதவி மற்றும் கடன் உத்தரவாதம் வழங்குவதற்கு அரசாங்கம் 4,000 கோடி வெள்ளி வரை ஒதுக்கீடு
செய்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

குறு மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கான 170 கோடி வெள்ளி மதிப்பிலான கடனுதவித் திட்டங்கள் பேங்க் நெகாரா மலேசியா, பி.எஸ்.என். தெக்குன் வாயிலாக வழங்கப்படுகின்றன என்றார் அவர்.


Pengarang :