NATIONAL

ஊக்குவிப்புத் திட்டத்திற்குச் சொக்சோ வெ.4.5 கோடி ஒதுக்கீடு

கோலாலம்பூர், பிப் 24: திவேட் திட்டத்திற்கு 17,000 பட்டதாரிகளை வேலைக்கமர்த்திய முதலாளிகளுக்கு ஊக்கத் தொகையாக 4 கோடியே 50 லட்சம் வெள்ளியைச் சொக்சோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

அந்த பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் போக, உபரியாக மூன்று மாத காலத்திற்குத் தலா 600 வெள்ளியை வழங்க இந்த ஒதுக்கீடு பயன்படும்.

இது தவிர, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் கைதிகள், குடும்பத்தால் கைவிடப்பட்டவரகள், வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் முதலாளிகளுக்கு மாதம் 600 வெள்ளி வீதம் மூன்று மாதங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தையும் சொக்சோ கொண்டுள்ளது.

திறன் வளர்ப்புத் திட்டங்களில் பங்கு கொள்ளும் கிக் எனப்படும் தற்காலிக அல்லது பகுதி நேர தொழில் புரிவோருக்கு மாதம் 300 வெள்ளி வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்.


Pengarang :