NATIONAL

குழந்தைகள் மேம்பாட்டுத் துறையை நிறுவ திட்டம்

கோலாலம்பூர், பிப் 25: குழந்தைகள் மேம்பாட்டுத் துறையை நிறுவுவதற்கு, வழங்கப்படும் ஒதுக்கீட்டைப் பொறுத்து படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.

குழந்தைகள் துறையை நிறுவுவது தொடர்பான விவரங்கள் பொது சேவைத் துறை மற்றும் நிதி அமைச்சகத்துடனும் கவனமாக விவாதிக்கப்படும் என்றார்.

“நாங்கள் அத்துறை இவ்வாண்டு நிறுவுவோம். ஆனால், அதற்கு RM86 பில்லியனுக்கும் மேல் செலவாகக் கூடும். கொடுக்கப்படும் ஒதுக்கீட்டை அனைத்தும் இந்த திட்டத்திற்கு முழுமையாக செலவு செய்ய இயலாது. இதனால், குழந்தைகள் துறையை நிறுவும் பணியைக் கட்டங்கட்டமாக தொடங்க வேண்டும்,“ என்றார்.

“இருப்பினும், அதற்கான ஒப்புதல் முக்கியமானது. இத்திட்டம் அங்கீகரிக்கப்படும் வரை நேரடியாக செயல்படுத்த முடியாது,” என்று அவர் கூறினார்.

பிரதமர் நேற்று 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் குழந்தைகளுக்கு விரிவான ஆதரவு சேவைகளை வழங்குவதற்காக சமூக நலத்துறையின் கீழ் குழந்தைகள் மேம்பாட்டு துறையை நிறுவும் என்று தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :