SELANGOR

8 முதுகலை மாணவர்களின் சமூக நலத் திட்டம் – மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம்

சுங்கை குமுட், பிப் 26: மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 8 முதுகலை மாணவர்கள் சமூக நலத் திட்டம் ஒன்றை சுங்கை குமுட் கிராமச் சமூக மையத்துடன் இணைந்து நடத்தவுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் சுங்கை குமுட்டில் உள்ள சமூக மையத்தை தையல் மையமாக மேம்படுத்த உள்ளனர்.

மேலும், இத்திட்டத்தின் நோக்கமானது வணிக வாய்ப்பு வழங்குதல், தையல் திறனைக் கற்று கொடுத்தல் மற்றும் வழிகாட்டுதலாக அமைதல் ஆகியவை ஆகும். இத்திட்டம் குறிப்பாக, B40 பெண்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

உலு சிலாங்கூர் மாவட்ட அதிகாரி துவான் முகமட் ஹனாவி அவர்கள் இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார். இந்த நிகழ்வு எதிர்வரும் பிப்ரவரி 27ஆம் திகதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறவுள்ளது.

இத்திட்டம் அவ்விடத்தைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :