SELANGOR

44 பள்ளி மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள்

ஷா ஆலம், பிப் 28: செந்தோசா தொகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த (B40) 44 பள்ளி மாணவர்கள் இலவச மூக்கு கண்ணாடிகளைப் பெற்றனர்.

“நல்ல பார்வையுடன் பள்ளிக்குத் திரும்புதல்“ நிகழ்ச்சியின் மூலம் அவர்களுக்கு இலவசக் கண் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அவர்களுக்குரிய கண்ணாடிகள் வழங்கப்பட்டதாக டாக்டர் குணராஜா தெரிவித்தார்.

“இந்த திட்டம் வழி B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கற்றல் பிரச்சனைகள் (தெளிவற்ற பார்வை) இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

“கண் பரிசோதனை மூலம் மொத்தம் 44 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் தங்களுக்குப் பிடித்த கண்ணாடி பிரேம்களைத் தேர்வு செய்யலாம்” என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்துள்ளார்.

குணராஜாவின் கூற்றுப்படி, வகுப்பில் கற்பித்தல் மற்றும் கற்றலின் போது மாணவர்கள் முழுமையாக கவனம் செலுத்துவதற்கு இந்த திட்டம் உதவும் என்று அவர் நம்புகிறார்.

மாணவர்களின் நலனுக்காக கைகோர்த்த செந்தோசா சிலாங்கூர் சமூக நலத் தன்னார்வாளர்கள் (சுகா), பள்ளி நிர்வாகம் மற்றும் VO ஆப்டிக்ஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார் குணராஜா.


Pengarang :