SELANGOR

கார் இல்லாக் கிள்ளான் தின நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

ஷா ஆலம், பிப் 28: கிள்ளான் மாநகராட்சி (எம்பிகே), பாடாங் லாமன் செனி சஃபாரியில் ஏற்பாடு செய்திருந்த கார் இல்லாக் கிள்ளான் தின நிகழ்ச்சியில் நேற்று 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கிள்ளான் மாவட்டச் சுகாதார அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு “ஆரோக்கியமான மற்றும் வளமான கிள்ளான், கனவு நகரத்தை நோக்கி பயணம்` என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இடம்பெற்றதாக யாங் டி பெர்துவான் தெரிவித்தார்.

“இது இந்த ஆண்டுக்கான ஆரம்ப திட்டமாகும். மேலும், இது கடந்த ஆண்டைப் போலவே அடுத்த மாதங்களிலும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

‘மகிழ்ச்சியான நடை’ என்னும் நடவடிக்கை இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த நடைபயிற்சி நடவடிக்கையின் மூலம் சுறுசுறுப்பான வாழ்க்கை கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறோம்,” என்று நோரைனி ரோஸ்லான் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார். .

காலை 7.30 மணி முதல் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுகாதாரப் பரிசோதனைகள், டிங்கி கண்காட்சிகள் மற்றும் மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களைப் பயன்படுத்தி கிள்ளான் பாரம்பரிய கட்டிடங்களை வடிவமைக்கும் போட்டி போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

மேலும், பூஜ்ஜிய பிளாஸ்டிக் சுவரொட்டி வரையும் போட்டி, செல்ஃபி ஜீரோ குப்பை சேகரிப்பு போட்டி மற்றம் பல போட்டிகளில் பொதுமக்கள் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது.


Pengarang :