SELANGOR

குழாய் பழுதுபார்ப்புப் பணி முற்றுப் பெற்றது- நீர் விநியோகம் கட்டங் கட்டமாக வழக்க நிலைக்குத் திரும்பும்

ஷா ஆலம், பிப் 28- பண்டார் பாரு பாங்கி, செக்சன் 3, பெர்சியாரான் பெக்கிலிலிங் பகுதியில் உடைந்த குழாயை பழுதுபார்க்கும் பணி இன்று காலை 11.30 மணியளவில் முற்றுப் பெற்றது.

வாடிக்கையாளர்களுக்கு நீரை விநியோகிக்கும் பணி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் நள்ளிரவு 12.00 மணியளவில் நிலைமை முழுமையாகச் சீரடையும் என்றும் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் கூறியது.

வாடிக்கையாளர்களின் இருப்பிடம் மற்றும் தொலைவைப் பொறுத்து நீர் விநியோகம் கிடைக்கும் நேரம் மாறுபடும் என்றும் அது தெரிவித்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு லோரிகள் மூலம் நீரை விநியோகிக்கும் பணியை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மருத்துவமனை, கிளினிக், டயாசிலிஸ் மையம் போன்ற இடங்களுக்கு நீர் விநியோகப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என அந்நிறுவனம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த குழாய் உடைப்பு காரணமாக உலு லங்காட் மாவட்டத்தின் 14 இடங்களில் அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் முன்னதாகக் கூறியிருந்தது.


Pengarang :