SELANGOR

கிள்ளான் பகுதியில் தூய்மைப் பராமரிக்க ஜே-ஃபோர்ஸ் சிறப்புக் குழு

ஷா ஆலம், பிப் 28: கிள்ளான் பகுதியில் தூய்மையைப் பராமரிக்காதக் குற்றத்திற்கு எதிரான கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கை ஜே-ஃபோர்ஸ் சிறப்புக் குழு மூலம் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

104 உறுப்பினர்களைக் கொண்ட ஜே-ஃபோர்ஸ் குழு காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனக் கிள்ளான் மாநகராட்சியின் (எம்.பி.கே) தலைவர் கூறினார்.

“இது வட கிள்ளான் மற்றும் தென் கிள்ளான் பகுதிகளை உள்ளடக்கியது,“ என்று நோரைனி ரோஸ்லான் கூறினார்.

குற்றம் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மேல்முறையீடு செய்ய முடியாதவை ஆகும். மேலும், தள்ளுப்படி இல்லாத அபராதத்தையும் வழங்க முடியும் என்றும் நோரைனி நினைவுபடுத்தினார்.

“இந்த அமலாக்கமானது, அமலாக்கத் துறை, சொத்து மேலாண்மைத் துறை, உரிமத் துறை மற்றும் சுகாதாரத் துறை உட்பட கிள்ளான் மாநகராட்சியின் கீழ் உள்ள பல துறைகளை உள்ளடக்கும்” என்று அவர் கூறினார்.

இதற்கு முன் கிள்ளான் நகர மையத்தைச் சுற்றியுள்ள பொது இடங்களில் குப்பைகளை வீசிய நபர்களுக்குக் கிள்ளான் மாநகராட்சி அபராதங்கள் வழங்கியுள்ளது.


Pengarang :