SELANGOR

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கிள்ளான் மாநகராட்சி ஏற்பாட்டில் சமூக நிகழ்ச்சி

ஷா ஆலம், மார்ச் 1: கிள்ளான் மாநகராட்சி (MPK) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்காக ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்வு என்னும் நோக்கத்தை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இச்சமூக நிகழ்ச்சியில் வருகையாளர்களுக்குப் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் காத்திருக்கின்றன.

துப்புரவு பணி, டிங்கி தடுப்பு நடவடிக்கை, சுகாதாரம் மற்றும் பல் பரிசோதனை, தீயணைப்பு விளக்கங்கள் மற்றும் மோசடி தொடர்பான விளக்கங்கள் ஆகியவை இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் என அதன் தலைவர் நோரைனி ரோஸ்லான் கூறினார்.

மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவன கண்காட்சிகள், மறுசுழற்சி பொருட்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்பு ஆகிய நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்படும்.

“குடியிருப்பாளர்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்தல் மற்றும் வலுப்படுத்துதலைத் தவிர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சுத்தமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கைச் சூழல் ஆகிய கூறுகளின் இந்நிகழ்ச்சி கவனம் செலுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

மார்ச் 5 ஆம் தேதி, பாடாங் ரெக்ரேசி, ஜாலான் மெரந்தி புத்தே 9B/KU10 தாமான் டேசா பெர்மாய் 3 மேரு, கிள்ளான் எனும் இடத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.


Pengarang :