NATIONAL

சொக்சோ வேலை வாய்ப்பு கண்காட்சியில் மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு-  அமைச்சர் சிவக்குமார் தகவல்

ரவாங், மார்ச் 1- சொக்சோ எனப்படும் சமூக நலப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மனித வள அமைச்சு நடத்திக் கொண்டிருக்கும் வேலை வாய்ப்பு கண்காட்சியில் மாற்று திறனாளிகளுக்கு வேலைகள் கிடைக்க வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்று மனித வள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.

சொக்சோவுடன் இணைந்து மனித அமைச்சு இப்போது நாடு தழுவிய அளவில் வேலை வாய்ப்பு கண்காட்சியை மிகப்பெரிய அளவில் நடத்தி வருகிறது. பல இடங்களில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் மலேசியர்கள் தங்களுக்கு பொருத்தமான வேலைகளை தேர்வு செய்து கொண்டனர்.

அந்த வகையில் மாற்றுத் திறனாளிகளுக்குப் பொருத்தமான வேலைகள் கிடைக்க வேலை வாய்ப்பு கண்காட்சியில் வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்று அவர் சொன்னார்.

ரவாங் தன்னிலை மாற்று திறனாளிகள் பயிற்சி மையத்திற்கு நேற்று நேரடி வருகை புரிந்த மனித வள அமைச்சர் சிவகுமார் 20,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார்.

ரவாங் தன்னிலை மாற்று திறனாளிகள் பயிற்சி மையத்தின் தலைவர் பிரான்ஸ் சிவா தமது உரையில் மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்ட வேளையில்  மாற்று திறனாளிகளுக்குக் கூடுதல் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் படி கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :