SELANGOR

புகார் அளிக்க QR குறியீடு உருவாக்கம் – பத்தாங் காலி தொகுதி

ஷா ஆலம், மார்ச் 1: பத்தாங் காலி தொகுதியின் மக்கள் சேவை மையம் நேற்று பத்தாங் காலி மாநிலச் சட்டமன்ற புகார் ஒருங்கிணைப்பாளர்க்கான QR குறியீட்டை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் அனைத்து புகார்களும் சீரமைக்க படுவதையும், சம்பந்தப்பட்ட தரப்பினரால் உடனடி நடவடிக்கைக்காகக் கண்காணிக்கப்படுவதை உறுதிசெய்வதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

உலு சிலாங்கூர் மாவட்ட அலுவலகம், உலு சிலாங்கூர் மாநகராட்சி (எம்பிஎச்எஸ்) மற்றும் பத்தாங் காலி தொகுதியின் கிராமச் சமூக மேலாண்மை கழகத் (எம்பிகேகே) தலைவர் ஆகியோரை இலக்காகக் கொண்டு இந்த QR குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது என மாநிலச் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் கூறினார்.

“உள்கட்டமைப்பு, பொது சுகாதாரம், கல்வி உதவி, குடியுரிமை பிரச்சினைகள், பேரிடர்கள் மற்றும் பிற பிரச்சனைகளுக்காக இந்த QR குறியீட்டின் மூலம் புகார்களை அனுப்பலாம்.

“தயவுசெய்து இத்திட்டத்தை விவேகத்துடன் பயன்படுத்தவும், குறிப்பாகப் பத்தாங் காலி மக்கள் இதை நன்முறையில் பயன்படுத்த வேண்டும்” என்று சைபுடின் ஷாபி முகமட் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

QR குறியீட்டின் பயன்பாடு பற்றிய கேள்விகளுக்குப் பொதுமக்கள் 03-6081 7080 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது pdun07@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கேள்விகளை அனுப்பலாம். மேலும், பத்தாங் காலி தொகுதியின் மக்கள் சேவை மையத்திற்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டது.


Pengarang :