NATIONAL

அதிகமான மருத்துவர்கள் மற்றும் தொழில்துறை மருத்துவ அதிகாரிகளை உருவாக்க வேண்டும் – சிலாங்கூர் சுல்தான்

செர்டாங், மார்ச் 1: தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகமான மருத்துவர்கள் மற்றும் தொழில்துறை மருத்துவ அதிகாரிகளை உருவாக்குமாறு சிலாங்கூர் சுல்தான் அவர்கள் புத்ரா மலேசியா பல்கலைக்கழகத்திற்கு (UPM) உத்தரவிட்டார்.

புத்ரா மலேசியா பல்கலைக்கழக மருத்துவமனையைச் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா மருத்துவமனை (HSAAS) என்று மறுபெயரிடுவதுடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சி மையமாக இந்த மருத்துவமனை செயல்படும் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் நம்புகிறார்.

“இந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்குப் புத்ரா மலேசியா பல்கலைகழகம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் தொடர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன், இதனால் அதிக மருத்துவர்கள் மற்றும் தொழில்துறை மருத்துவ அதிகாரிகளை உருவாக்க முடியும்.

“மலேசியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பது மிகவும் அவசியம்.

“எனவே, சமூகத்திற்கான சிறந்த சுகாதார சேவைகளில் பங்களிக்கப் புத்ரா மலேசியா பல்கலைகழகம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

“நாம் மக்களின் நலன்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் மற்றும் சிறந்ததை வழங்க முயற்சிக்க வேண்டும். மேலும், சேவைகளை வழங்கும்போது நம்பகமான, நேர்மையான, ஒழுக்கமான, வாடிக்கையாளர் நட்பு மற்றும் சேவை செய்யத் தயாராக இருப்பது போன்ற அமசங்களை முன்னிலைப்படுத்த வேண்டும்,” என்று கூறினார் சுல்தான் ஷராபுடின்.


Pengarang :