NATIONAL

ஜொகூரில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்த அவசியமில்லை

செகாமட், மார்ச் 5: வானிலைச் சீராகி வரும் நிலையைத் தொடர்ந்து, ஜொகூரில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவதில்லை என்ற முடிவை அரசாங்கம் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

“மழை குறையத் தொடங்கியதாலும், சில இடங்களில் வெள்ளம் தணியத் தொடங்கியதாலும் அவசர நிலையைப் பிரகடனப்படுத்த அவசியமில்லை என்று அரசு முடிவெடுத்துள்ளது.

“இன்று முதல் நீரின் அளவு குறையத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது,” எனப் பிரதமர் கம்போங் தெங்கா தேசிய வகை சீனப் பள்ளியில் அமைக்கப்பட்ட தற்காலிக தங்கும் மையத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜொகூரில் ஏற்பட்ட வெள்ளத்தின் நிலை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, அவசரகால நிலையை அறிவிக்க வேண்டிய அவசியம் உள்ளதா என்று கேட்டபோது பிரதமர் இவ்வாறு கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு (வெள்ளிக்கிழமை) நடந்த அமைச்சரவை கூட்டத்தில், வெள்ளம் காரணமாக அவசர நிலையைப் பிரகடனப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்யப்பட்டது.


Pengarang :