SELANGOR

“ஸ்வெட் இட் அவுட்“ நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

ஷா ஆலம், மார்ச் 5: பண்டார் கின்ராராவைச் சுற்றி இருக்கும் 600க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இன்று காலை சுபாங் ஜெயாவில் உள்ள தாமான் ரெக்ரேசி வவாசனில் நடந்த “ஸ்வெட் இட் அவுட்“ நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மார்ச் 8 அன்று கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி உள்ளூராட்சி மற்றும் புதியக் கிராம அபிவிருத்தி எஸ்கோ இங் ஸீ ஹான் அவர்களால் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது.

கின்றாரா தொகுதி உறுப்பினராகவும் இருக்கும் அவர், இந்த திட்டம் அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) சயாங்கி கின்ராரா மற்றும் சுபாங் ஜெயா மாநகராட்சி (எம்பிஎஸ்ஜே) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார்.

“நாங்கள் சயாங்கி கின்ராரா மற்றும் எம்பிஎஸ்ஜே உறுப்பினர்களுடன் இணைந்து, இந்த விசாலமான வவாசன் பொழுதுபோக்கு பூங்காவில் உடற்பயிற்சி செய்வதற்காகக் கின்ராராவில் வசிக்கும் 600க்கும் மேற்பட்டவர்களை ஒன்று திரட்டியுள்ளோம்.

“இந்நிகழ்ச்சி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மக்கள் மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ இது போன்ற பல திட்டங்கள் தேவை,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜூம்பா, மரப்பந்து, சுகாதாரப் பரிசோதனைகள், மனநல தொடர்பான கேள்வி அங்கம், பெர்கெசோ மற்றும் டாருல் ஏஹ்சான் நீர் திட்டங்களுக்கான பதிவு கவுண்டர் ஆகியவை இந்நிகழ்வில் இடம்பெற்றன.


Pengarang :