SELANGOR

மலிவு விற்பனையில் ஆறு பொருட்கள் விற்றுத் தீர்ந்தன – ஈஜோக் தொகுதி

கோலா சிலாங்கூர், மார்ச் 6: இன்று ஈஜோக் தொகுதியில் நடைபெற்ற மலிவு விற்பனையில் ஆறு பொருட்கள் விற்றுத் தீர்ந்தன. அவை இறைச்சி, மீன், கோழி, முட்டை, சமையல் எண்ணெய் மற்றும் அரிசி ஆகியவை ஆகும்.

அப்பொருட்கள்  குறைந்த விலையில் விற்பதால் மூன்று மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்து விட்டதாக பெர்மாத்தா ஏஹ்சான் மூத்த உதவி மேலாளர் நூர் அமிரா மஹ்டான் கூறினார்.

“இன்று, இறைச்சி மற்றும் மீன் அதிகம் விற்பனையாகின. இதற்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்ட மலிவு விற்பனை திட்டத்தில், கோழி மற்றும் முட்டைகள் விரைவில் விற்று தீர்ந்து விடும்.

“ரம்டான் விரைவில் வரவிருப்பதால், மக்கள் அரிசி மற்றும் சமையல் எண்ணெயை முன்கூட்டியே இருப்புக்கு வாங்கலாம்,” என்று அவரைச் சந்தித்தபோது கூறினார்.

சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகம் (PKPS) நடத்தும் இந்த விற்பனைக்கு 500 கோழிகள், 300 பலகை முட்டைகள், 300 இறைச்சி பேக்கட்டுகள், 300 மீன் போக்கட்டுகள், 300 அரிசி மூட்டைகள் மற்றும் 150 சமையல் எண்ணெய் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மூன்று மாதங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் பயனடைந்தனர்.


Pengarang :